kanyakumari டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் நிமிர்குழு ., செய்த செயல் என்னவென்று தெரியுமா !?? by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 6 Reading Mode டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் நிமிர் குழு, செய்த செயல் என்னவென்று தெரியுமா !!? திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர்(The Rising Team) பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட அப்பெண் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைப்பு.* கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழுவிற்கு, திண்டுக்கல் ஊரை சேர்ந்த அனுசியா (வயது 33) பெண்ணை காணவில்லை என்று கொடுக்கப்பட்டிருந்தது. நிமிர் போலீசார் பார்வதிபுரம் பாலத்தின் அருகில் காணாமல் போன பெண் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று காணாமல் போன பெண்ணை கண்டறிந்து மீட்டனர். விசாரணையில், அந்தப் பெண் சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு காணவில்லை என்றும்இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக,நிமிர் போலீசார் அவரை வெள்ளிச்சந்தையில் உள்ள “அன்பாலையா” பெண்கள் மனநல காப்பகத்தில் சேர்த்தனர். பிறகு திண்டுக்கல் சின்னாளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அனுசியாவின் பெற்றோர் மற்றும் திண்டுக்கல் காவல் நிலைய பெண் காவலர் கன்னியாகுமரிக்கு வந்து அனுசியாவை தங்களுடன் அழைத்து சென்றனர். மனநிலை பிரச்சனைகளால் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் நபர்களை மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் பணிகளில் தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நிமிர் குழுவின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default Stalin IPS nimir Kulu Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கனிமவள வாகனங்கள் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு செல்ல தடை விதித்த விவகாரம் ! என்ன ஆனது !!? next post 45 காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற பயிற்சி வகுப்பு !! ஸ்டாலின் ஐபிஎஸ் திறந்து வைப்பு !! You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.