dintigul புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய , காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் !? by ஆசிரியர் May 26, 2026 written by ஆசிரியர் May 26, 2026 0 comments 8 Reading Mode புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய , காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் !? டிஐஜி. சசி மோகன் உத்தரவு !!? புகார் கொடுக்க வந்த பெண்ணின் செல் நம்பரை பெற்றுக் கொண்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய சப் – இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்..!! திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சனை குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலமாகப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாசமான முறையில் மெசேஜ்களை அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் அதிகாரி ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து உயர் காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை என்பது மக்களை பாதுகாக்கும் காவலனாக, சட்டம் – ஒழுங்கு தவறாத கண்ணியமிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியமானது. கடமை தவறாத, கண்ணியமிக்க காவல் அதிகாரிகளாக தன் பணியை செவ்வனே செய்து மக்களை பாதுகாக்கும் கவசமாக சீறி வரும் சிங்கங்கள் போல் சிறப்பாக பணி செய்து எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் வலம் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களைப் போன்ற ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் விளைவிக்கும் சூழல் ஏற்பட்டு காவல்துறையிடம் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து விடுகிறது. காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீண்டும் பணியில் சேர்ந்து சட்டம் – ஒழுங்கைப் பாதுகாத்து கண்ணியமிக்க காவல் அதிகாரியாக செயல்பாட்டில் காண்பித்து , ஏற்படுத்திக் கொண்ட களங்கத்தை நீக்கி நற்பெயர் எடுக்க வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இளம் சிறார்கள் இயக்கிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு !!? next post பட்டுக்கோட்டை போலீசாரின் அதிரடி சோதனை ! சிக்கிய 300 கிலோ குட்கா !! ஒருவர் கைது !!!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.