dintigul திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் !!? by ஆசிரியர் June 4, 2026 written by ஆசிரியர் June 4, 2026 0 comments 26 Reading Mode திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் ! விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர், பெண் ஏட்டு, ஒழுங்கீனமாக செயல்பட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்து நடந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் உள்பட இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட போலீசார் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ (வயது 51), ஏட்டு சுதாராணி (42) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டார். இதற்கிடையே அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை போலீஸ்காரர் மணிகண்டன் (வயது 35) பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்ற நிலையில், அவரை பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் உத்தரவிட்டார். மேலும் ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் லியோனி ரஞ்சித்குமார். இவர், இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருந்தார். அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோனி ரஞ்சித்குமாரை கட்டாய ஓய்வில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீசார் உள்பட மொத்தம் 4 போலீசார் மீது நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 4 police suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப். ஐபிஎஸ் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆய்வு !? next post தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு ! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து !!? You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.