chennai தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு ! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து !!? by ஆசிரியர் June 4, 2026 written by ஆசிரியர் June 4, 2026 0 comments 3 Reading Mode தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு ! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து !!? தமிழக சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஷ் குமார் அகர்வால், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாட்டின் 34வது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் (2026 ஜூன் 3) சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மகேஷ் குமார் அகர்வாலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் காவல் துறையினர் வீரவணக்க நாளுக்காக வைக்கப்பட்டுள்ள சின்னத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ”தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முதலமைச்சர் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு, போதைப் பொருட்கள் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைப்பு, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. காவல் துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். மகேஷ் குமார் அகர்வால் பின்னணி. டிஜிபியாக பொறுப்பு ஏற்றிருக்கும் மகேஷ் குமார் அகர்வால் இதற்கு முன்பு முக்கிய பொறுப்புகளில் தமிழ்நாட்டில் செயலாற்றி உள்ளார். குறிப்பாக சட்டம் – ஒழுங்கு மட்டுமல்லாமல் குற்றப் புலனாய்வு பிரிவிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த இவர் பி.ஏ, பிஎல் சட்டப்படிப்பு படித்தவர். மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். தேனி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன் பிறகு சென்னை பூக்கடை துணை ஆணையராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார். அயல்பணி காரணமாக சண்டிகரில் சிபிஐயில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் தமிழ்நாடு திரும்பிய அவர், சிபிசிஐடியில் டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மதுரை மாநகர காவல் ஆணையரக சிபிசிஐடி ஐஜி, சென்னை காவல் ஆணையர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி, தமிழக ஆயுதப்படை பிரிவின் டிஜிபி என பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மனித உரிமைப் பிரிவின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் பணிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு இதனிடையே, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர்க்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் சிறைத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சிறைத் துறை ஏடிஜிபியாக இருந்த சங்கர் அமலாக்க பணியக குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default dgp mageshkumar agarval Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 காவலர்கள் பணியிடை நீக்கம் !!? next post பதக்கங்கள் பெற்ற பெண் காவலர்கள் ! பாராட்டுக்களை தெரிவித்த குமரி எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்!!? You may also like விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? June 7, 2026 தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? June 3, 2026 ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? May 17, 2026 தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... May 14, 2026 தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... May 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.