கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 15 Reading Mode குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? திருடிய பணத்தில் மனைவி பெயரில் வாங்கிய நிலத்தை நீதிமன்றம் மூலம் கையகப்படுத்தி கன்னியாகுமாரி மாவட்ட காவல்துறை அதிரடி! கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு குற்றங்களை தடுக்கும் முயற்சியின் ஒரு மைல்கல் நடவடிக்கை! கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புறாக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி புஷ்பம் (வயது 38) இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். பின்னர் வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விசாரணையில் வீட்டில் திருடு போனது தெரிய வந்த நிலையில் உடனே பளுகல் காவல் நிலைய குற்ற எண் 11/2026 U/S 331, 357, 380 IPC r/w 331 (3), 331 (4), 305 (a) BNS பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவுப்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பளுகல் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கேரளா மாநிலம் காட்டாக்கடை, புலநாடு பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் என்பவரின் மகன் உன்னி கிருஷ்ணன் (வயது 53) என்பது தெரிய வந்தது இதனையடுத்து குற்றவாளியை கைது செய்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் உன்னி கிருஷ்ணன் கொள்ளை அடித்த நகை மற்றும் பணத்தின் மூலமாக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரைப் பகுதியில் அவரது மனைவி பெயரில் சுமார் 8.40 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் வாங்கியது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடைய உத்தரவில் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பளுகல் காவல் நிலைய போலீசார் தகுந்த ஆதாரங்களை குழித்துறை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளி திருடிய பணத்தில் தன்னுடைய மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default assets recover Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? next post பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.