கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்-குவியும் பாராட்டுக்கள்!! by ஆசிரியர் May 3, 2026 written by ஆசிரியர் May 3, 2026 0 comments 17 Reading Mode காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்-குவியும் பாராட்டுக்கள்!! பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்” மூலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் உட்கோட்ட அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் “நம்ம ஊரு காவலர்கள்” தலைமையில் பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காவல்துறையுடன் மக்களின் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களில் குற்றவாளிகளை விரைவாக கண்டறியவும் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்தையும் பாதுகாப்பான கிராமமாக மாற்ற வேண்டும் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் நோக்கத்தின் அடிப்படையில், மேலும் அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சிசிடிவி கண்காணிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு! next post சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.